;
Athirady Tamil News

நோய்கள் உருவாகும் காரணிகள் !! (மருத்துவம்)

0

நோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்.

* இரசாயன வேளான்மையில் விளைந்த உணவுப் பொருட்களை அதிகமாக எமது உணவில் சேர்த்துக் கொள்வது.

* தேநீர், கோப்பி போன்ற பானங்களை அருந்துதல்.

* வௌ்ளைச் சீனி , வௌ்ளைச் சீனியில் செய்த தீன்பண்டங்களை உண்பது.

* பொதிசெய்யப்பட்ட (பக்கெட்) பால், தயிர், போத்தல் நெய், சீமை மாட்டுப் பால், சீமை மாட்டு பால் பொருட்களிலான உணவுகளை பயன்படுத்துதல்.

* தூள் உப்பு, ​அயடின் உப்பின் பயன்பாடு.

* பொய்லர் கோழி இறைச்சி, முட்டை,6 மணித்தியாலத்திற்கு மேலான மாமிச உணவுகளை உண்பது.

* பட்டை தீட்டிய அரிசி, குக்கர் சோறு போன்றவற்றை உண்பது.

* வடிகட்டிய நீர், கொதிக்க வைத்த நீர் அருந்துதல்.

* அலுமியம், நொன்ஸ்டிக் பாத்திரங்கள், மின் அடுப்புகள் போன்றவற்றில் சமைத்தல்.

* சத்துப்பானம் எனும் சாக்கடைகளை அருந்துதல்.

* நவீனமயமாக்கப்பட்ட பலவகையான சோப்புகள், ​ஷேம்போக்கள், பற்பசைகள் போன்றவற்றை பயன்படுத்துதல்.

* செயற்கை பஞ்சு படுக்கைகள், இருக்கைகள் போன்வற்றின் பயன்பாடுகள்.

* குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், போன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் அனைத்து உணவுப் பொருட்களும் உடலுக்கு தீங்கானவையே.

* பேக்கரி பொருட்கள், அனைத்து கோதுமை மா பொருட்களின் பயன்பாடு.

* முத்திரையிடப்பட்ட மசாலாப் பொருட்களை பயன்படுத்துதல்.

* இரசாயன நுளம்பு சுருள்களின் பயன்பாடு.

* புகைப்பழக்கம், மதுபழக்கம், சுவையூட்டப்பட்ட பாக்கு, புகையிலை பழக்கம்.

* சுடு நீரில் குளிப்பது, தலைக்கு பயன்படுத்தும் இரசாயன ​டை வகைகள் போன்றவை.

* துரித உணவுகள், பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை அதிகம் விரும்பி உண்பது.

* குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் அனைத்து உணவுப் பொருட்கள்.

* உடல் உழைப்பு இன்னை, பசிக்காமல் உண்பது, அவசர அவசரமாக உண்பது, அதிக தாமதமாக உண்பது, இடையில் நீர் அருந்தி அருந்தி உண்பது.

* சுற்றுச் சுழல் மாசுபாடு, ஆங்கில மருத்துவம், அறியாமை அனைத்திற்கும் மேலாக உங்கள் மனநிலை போன்ற தவறான வாழ்க்கை முறையினால் தான் நோய்கள் உருவாகின்றது.

இந்நிலையில் இருந்து உயிர் பிழைத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு மீண்டும் நாம் இயற்கையின் பக்கம் திரும்புவதே…

மேலே கூறியவற்றுக்கு, பதிலாக நாம் இயற்கை முறையில் இவற்றை கடைப்பிடிக்க முன்வருவோம்.

* இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்களின் பயன்பாடுகள்.

* மூலிகை தேநீர், சுக்கு, கொத்தமல்லி கோப்பி, பனங்கற்கண்டு கரும்பு சீனி, நாட்டு பசும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் உபயோகம்.

* கல் உப்பு, மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், நாட்டுக்​ கோ​ழி இறைச்சி, முட்டை , பட்டை தீட்டப்படாத அரிசி உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.

* சமையலுக்கு மண்பாண்டங்கள், இரும்பு பாத்திரங்கள், விறகு அடுப்பு போன்றவற்றையும் வீட்டில் அரைத்த மசாலப் பொருட்கள், மண் பானையில் ஊற்றி வைத்த நீர், மழை நீர் போன்றவற்றின் பயன்பாடு மிகவும் சிறந்தது.

* குளிர்ந்த நீரில் குளிப்பது, சிகைக்காய் பொடி, இயற்கை பற்பொடி, தலைக்கு இயற்கையான முறையில் டை பயன்படுத்துதல்.

* இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை, கோரைப்பாய், இயற்கை நுளம்புச் சுருள், ஆழ்ந்த நிம்மதியான உறக்கம், இடையில் எழும்பி நீர் அருந்தாமை போன்றன சிறந்த பழக்கவழக்கங்கள்.

* உணவு உண்ணும் போது அமைதியாக சுவைத்து உண்பது, பசித்தால் மாத்திரம் உண்பது, நன்றாக மென்று உண்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

* வீட்டில் மரம், செடி, கொடிகளை வளர்த்தல். காற்றோட்டம், வெளிச்சமான வீடு, மாசற்ற சூழல், மரபுவழி மருத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை நடைமுறைகள்.

* அறிவுக்கூர்மையுடன் அமைதியான மனநிலையுடன் மருந்துக்கோ மருத்துவ மனைக்கோ இடம் கொடுக்காமல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது.

“இயற்கையை நம்பியிருந்தால்,

இன்பமாய் வாழ்ந்திருப்போம்.

இயந்திரங்களை நம்பியிருந்தால்,

இயந்திரமாகவே வாழ்ந்திருப்போம்.

முடிந்தவரை இயற்கையை சார்ந்து,

இன்பமாய் வாழ்வோம்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − twelve =

*