;
Athirady Tamil News

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு!!

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று (24) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்க அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − eight =

*