;
Athirady Tamil News

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!!

0

வவுனியா, நந்திமித்ரகம பிரதேசத்தில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக வவுனியா, போகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

போகஸ்வெவ 02 ம் பிரிவைச் சேர்ந்த ஒருவரே தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 03.30 மணியளவில் போகஸ்வெவ இல் இருந்து வவுனியா செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது வவுனியா சந்தைக்கு வந்து கொண்டிருந்த குழுவொன்று குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − seven =

*