;
Athirady Tamil News

திருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..!!

0

திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத் தில் உள்ள கிழக்கு தெருவில் வசிப்பவர் சமையன் (வயது 28). இவர் கருமாத்தூரில் டெய்லர் கடை நடத்தி வரு கிறார்.

இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி (23) என்ற மனைவியும் ஒரு குழந்தை யும் உள்ளனர். நேற்று இரவு கணவன்- மனைவி இரு வரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ள னர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்ட மர்ம நபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந் தான். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றான்.

திடுக்கிட்டு எழுந்த முத்து லட்சுமி திரு டன்… திருடன்… என கூச்ச லிட்டார். ஆனால் மர்ம நபர் அதற்குள் முத்து லட்சுமி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினான்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − one =

*