;
Athirady Tamil News

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்!!

0

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச, தனியார் பேருந்துகள் இணைந்த சேவைகள்

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துச் சேவைகளும் இ.போ.ச. பேருந்துகளும் இணைந்து சேவையாற்றி வருகின்றன

வடமாகாண ஆளுநர் சுரேன்ராகவனின் உத்தரவிற்கு அமைவாக இன்றிலிருந்து (25.06.2019) பழைய பேருந்து நிலையத்தில் உள்ளுர் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து உள்ளூர் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று மூன்று நிமிடங்கள் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிச்செல்லவுள்ளன

இதனால் பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையத்தினூடாக பொதுமக்கள் தமது பயணங்களையும் மேற்கொண்டு வருவதால் பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத்திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + one =

*