;
Athirady Tamil News

போதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்!! (படங்கள்)

0

போதையற்ற தேசமாக நமது நாட்டினை உருவாக்கும் உயரிய நோக்கினை கொண்டு தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதையற்ற வாரத்திற்கு வடமாகாணத்தின் ஒன்றிணைந்த பங்களிப்பினை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் (25) இன்று காலை நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் ………..

போதைவஸ்து பாவனையினால் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி ஆகியவற்றிற்கு பெரும் தடையாக உருவெடுத்து காரணியாகவும் அமைந்துள்ளது.

பணபலம் படைத்தவர்களின் பாவனை என்பதை தாண்டியும் இன்று வறியவர்களின் வளர்ச்சியினையும் பாதிப்படைய செய்துள்ளது.

நாம் ஒவ்வொரு செங்கல்லாக அடியெடுத்து வைக்கும் சூழலில் யுத்தத்திற்கு பின்னர் கல்வி ,அபிவிருத்தி,பொருளாதார வளர்ச்சியினையும் குந்தகப்படுதியுள்ளது.

எமது முன்னேற்றத்தை நலனாக கொண்டு எமது கிராமம்,எமது மாவட்டம் ,எமது மாகாணத்தினை சகல வழிகளிலும் முன்னேற்றம் அடைய செய்வது அனைவரினதும் ஒன்றிணைந்த பொறுப்புடன் கூடிய கடமை எனவும் குறிப்பிட்டார்.

கொள்கைகள் ,சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். சிகிச்சைகளுடன் ,பயிற்சி நிலையங்கள் ஊடாக விழிப்புணர்வை வழங்கல். முழுமையாக தடுத்தல் என்ற மூன்று முறைகளின் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்

ஜனாதிபதியுடனான பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான பயணத்தின் போது போதைவஸ்து பாவனை,போதைவஸ்து கடத்தல் காரணமாக நாடும் , மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததோடு அவர்களின் வளர்ச்சியிலும் பெரும் தடை ஏற்பட்டிருந்ததாகவும் நினைவூட்டியிருந்தார்.

எமது நாட்டிலும் போதைவஸ்துக்களை கட்டுப்படுத்தி ஒழிப்பதன் மூலம் எமது நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என்பதை நாட்டின் தலைவரும் மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.

வடமாகாணத்தில் போதைவஸ்தை கட்டுப்படுத்தி துடைத்தெறிந்து எமது இளைஞர்களை சரியான பாதையில் நகர்த்தி செல்வோம்.சிறந்த எதிர்காலத்தை பொருளாதார வளர்ச்சியினை ஏற்ப்படுத்தி எமது பிரதேசத்தை கல்வி, பொருளாதாரம், கலாச்சார ரீதியாக மீண்டும் பலம் பெறுவதற்கு உறுதியாக நேரான திசை நோக்கி பயணிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்தும் போதைக்கு எதிரான வாசகங்களை தாங்கி வாகன பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரியை வந்தடைந்தது.அதன் பின்னர் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அங்கஜன் இராமநாதன்,காதர் மஸ்தான்,மாவட்ட அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள்,துறை சார் அதிகாரிகள்,அரச உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் போதையற்ற தேசத்தை உருவாக்கும் நிகழ்வில் இணைந்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*