;
Athirady Tamil News

400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை!!

0

உலகக் கிண்ண போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.

சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்தது.

முஷ்பிகுர் ரகீம் 83 ஓட்டங்களும், ஷாகி அல் ஹசன் 51 ஓட்டங்களும் எடுத்தனர். முஜீப் உர் ரகுமான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 47 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால் பங்களாதேஷ் 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இது அந்த அணி பெற்ற 3-வது வெற்றியாகும்.

இதன்மூலம் 5-வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 7-வது தோல்வியை தழுவியது. ஷாகிப் அல் ஹசன் 29 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷ் முன்னாள் கேப்டனான ஷாகிப் அல் ஹசன் சகல துறை பணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 476 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதில் 2 சதமும், 3 அரை சதமும் அடங்கும். சராசரி 95.20 அதிகபட்சமாக 124 ஓட்டங்கள் குவித்துள்ளார். அத்துடன் 10 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

இதன்மூலம் உலகக் கிண்ண போட்டியில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து 10 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். மேலும் உலகக் கிண்ண போட்டியில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற முத்திரையையும் பதித்தார்.

உலகக் கிண்ணத்தில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன்தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*