;
Athirady Tamil News

வறுத்தெடுக்கும் வெயில் – டெல்லி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை ஒருவாரம் நீட்டிப்பு..!!!

0

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை முதல் தேதி (நாளை) திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டெல்லியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருந்துவரும் நிலையில் அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கோடை விடுமுறை ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார்.

மணிஷ் சிசோடியா

முதல் தேதிக்கு பதிலாக வரும் 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.