;
Athirady Tamil News

திருமங்கலம் அருகே தந்தை-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

0

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் 4 வழிச்சாலையில் சாலையோர பள்ளத்தில் ஒரு ஆணும், சிறுமியும் இறந்து கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இறந்து கிடந்தவர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிக்கரசம்பாளையம், சேரன் நகரைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் (வயது 41) என்று தெரிய வந்தது.

இவர் கோவையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இவருடன் 8 வயது மகளும் இறந்து கிடந்தார்.

கிருபாகரன் உடல் அருகில் டிரைவிங் லைசென்சு, சிம்கார்டு இல்லாத செல்போன், வி‌ஷ மருந்து மற்றும் கைப்பை ஆகியவை கிடந்தன.

மேலும் அவரது கையில் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. அதில் தொடர்பு கொண்ட போது இணைப்பு கிடைக்கவில்லை.

இருவரும் எதற்காக இந்தப்பகுதிக்கு வந்தார்கள்? கிருபாகரன், மகளுடன் ஏன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.