‘நான் தற்கொலை பயங்கரவாதி’ என்று ‘ஜோக்’ அடித்தவர் கைது – 6 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு..!!

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவர்க் நகரத்துக்கு 327 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு கடந்த வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அந்த விமானம் லண்டனில் தரை இறக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பயணி ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் நான் தற்கொலை படை பயங்கரவாதி என்று ஜோக் அடித்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த அவரது பெயர் அதுல் பட்டேல் (வயது 35). டிராவல் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவரது வியாபாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துபாயில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்தார்.
அப்போது விமானத்தில் செல்லும் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.