;
Athirady Tamil News

குடிபோதையில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிய நபர் பலி..!!

0

கம்பளை – நாவலபிட்டிய, வல்லாகொட பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த நபர் குடிபோதையில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் புகையிரதத்தில் குறித்த நபர் மோதியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.