யாழ் நகரில் பெண் கலைஞரின் மிருதங்க அரங்கேற்றம்..!!(படங்கள்)
மிருதங்க ஞானவாரி .கொக்குவில் இந்துக் கல்லூரி இசையாசிரியர்சி.துரைராசா வின் நல்லைக் குருஷேத்ரம் கலை மன்றத்தின் மாணவி செல்வி ர.திலக்சனா வின் மிருதங்க அரங்கேற்றம் நேற்று(30.06.2019 ) மாலை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகப் பேராசிரியர் வசந்தி அரசரத்தினமும் சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் வேல்.ஆனந்தன் மற்றும் வைத்திய நிபுணர் இ.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்து மதக் குருமாரின் ஆசிகளைத் தொடர்ந்து அரங்கேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அரங்கேற்ற நிகழ்வில் அணிசெய் கலைஞர்களாக த. ரொபேட் (பாட்டு) அ .ஜெயராமன் (வயலின் ) ப. சியாம் கிருஷ்ணா (கெஞ்சிரா ] தா.துவரகன் (கடம்) க.நந்தகுமார் (முகர்சிங்) க. ராஜீவன் (தம்பூரா) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
ஈழத்தின் தமிழிசைப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வரங்கேற்றமானது குரு சி.துரைராசா வினால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் திருமதி கானகோகிலம் ஜெயம் அவர்களுக்குப் பின்னர் (கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இடைவெளியில்) ஈழத்தின் மிருதங்கத் துறையில் அரங்கேற்றம் கண்டு மிளிரும் பெண் மிருதங்கக் கலைஞராக திலக்சனாவை அனைவரும் மனம் மகிழ்ந்து வாழ்த்துவோம், வரவேற்போம் என கர்நாடக இசை விரிவுரையாளரும் அரங்கேற்றத்தில் குரலிசைக் கலைஞனுமான தவநாதன் ரொபேட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.