IGP மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தல்..!!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சந்தேக நபர்களாக கருதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் கடந்த வியாழக்கிழமை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (01) மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பிய சட்டமா அதிபர் அறிவுறுத்தல் தொடர்பில் இதுவரையில் செயற்படாமை தொடர்பில் காரணங்களை இன்றை தினத்திற்குள் எழுத்து மூலம் அறிவிக்குமாறு தெரிவித்ததாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தில், ஏப்ரல் 21 தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சொத்து சேதம் என்பன பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் கவனயீனம் காரணமாக இடம்பெற்றமைக்கான போதியளவு ஆதரங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.