ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது கீரியும் பாம்பும் போல..!!

நான்கரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கம் தற்போது நாட்டை உறுதியற்ற நிலைக்கு அழைத்து சென்று கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது மின்சார துறை மற்றும் எரிபொருள் அமைச்சர்கள் யுத்தம் ஒன்றிற்கு தயாராக உள்ளதாகவும் இதனால் மக்கள் பல்வேறு சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8 ஆம் திகதி ஆகும் போது ஜனாதிபதி தேர்தலை முடித்துவிட்டு புதிய ஜனாதிபதி ஒருவர் பதவி பிரமாணம் செய்துகொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது கீரியும் பாம்பும் போல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.