தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பம்..!!

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது. இது எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இடம்பெறும்.
இதன் கீழான திட்டங்கள் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயம் விஷேட வைத்தியர் லக்மால் கம்லத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 1 மில்லியன் பேர் இதனால் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர். அது மாத்திரம் அன்றி பலர் ஊனமுற்ற நிலைக்கு உள்ளாகின்றனர். இதற்கு காரணம் விபத்துக்களே ஆகும் என்று பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
15 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டவர்களின் உயிரிழப்புக்கு காரணம் திடீர் விபத்துக்களே ஆகும். இதற்கு முக்கிய காரணம் கவலை குறைவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிடுவதாக அவர் தெரிவித்தார்.
திடீர் விபத்துக்கு காரணம் வீதி விபத்துக்கள் காரணம் இன்று நாய் கடித்தல் போன்ற விலங்குகளால் ஏற்படும் தாக்கம் வெட்டுதல் நச்சு உடலில் சேர்தல் ஆகியவற்றை கூற முடியும். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.