;
Athirady Tamil News

இலங்கையின் மத விவகாரங்களில் நேரடியாக தலையிடும் அமெரிக்கா! கொந்தளிக்கும் சிங்களவர்கள்..!!

0

இலங்கையில் மத நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதற்காக அரசசார்பற்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக அமெரிக்க அரசாங்கத்தின் புதிய மத அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, 74 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இந்த அறிக்கையில் சிங்கள அமைப்புகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த இனவாத குழுக்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பௌத்த குழுக்கள் மற்றும் இராணுவம் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிதமர் உட்பட அதிகாரிகளுடன் அமெரிக்கா கலந்துரையாடல் மேற்கொண்டு வருகிறது.16 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையில் சிங்கள பௌத்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*