;
Athirady Tamil News

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல்! பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையால் பதற்ற நிலை..!!

0

மட்டக்களப்பு, புதூர் பகுதியில் இரு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதன்போது ஒரு பொலிஸாரின் ஆயுதமும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வரும் நிலையிலேயே அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இளைஞர் ஒருவரை இரண்டு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்று பிடிக்க முற்பட்டபோது குறித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும் குறித்த போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கு நின்ற சிலரால் குறித்த போக்குவரத்து பொலிஸார் இருவரும் தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் கைத்துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுன் தொடர் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*