;
Athirady Tamil News

விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் வைத்தியசாலையில்..!!

0

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்கந்த வீதியின் ஹதபானாகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று (03) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 64 வயதுடைய காமினி எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eighteen =

*