;
Athirady Tamil News

மரண தண்டனைக்கு எதிரான மனு நாளை வரை ஒத்திவைப்பு..!!

0

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு நாளையதினம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சட்டமா அதிபர் முன்வைத்துள்ள ஆட்சேபனை தொடர்பில் நாளைய தினம் மேலதிக விளக்கவுரை இடம்பெற உள்ளது.

குறித்த மனு இன்று தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, தீபாலி விஜேசுந்தர, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி செலிசிஸ்டர் ஜெனரல் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து அடிப்படை ஆட்சேபனை வௌியிட்டார்.

இந்த மனுவின் மூலம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமையை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும், இதனால் அரசியல் யாப்பின் 35வது சரத்தின் பிரகாரம் நிதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் பிரதி செலிசிஸ்டர் ஜெனரல் கூறினார்.

இதனையடுத்து மனுவின் மேலதிக விசாரணை நாளைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*