;
Athirady Tamil News

சுற்றுலாத் துறைக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்த பணிப்புரை..!!

0

இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக பாதிப்படைந்த சுற்றுலா தொழிற்துறை மற்றும் ஏனைய தொழிற்துறைகளுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.

சுற்றுலா தொழிற்துறையின் எதிர்காலம் தொடர்பில் எதிர்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு இந்த துறையை மேம்படுத்துவதற்காக நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதலினால் பின்னடைவுக்கு உள்ளாகிய நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சில முன்மொழிவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − thirteen =

*