;
Athirady Tamil News

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது..!!

0

தம்புள்ளை, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சீகிரியா, தல்கோட்டே பிரதேசத்தில் தேவையற்ற விதமாக அகழ்வு மேற்கொண்ட 05 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுடன் உள்ள குறித்த இடத்தில் 08 அடி நீளம் மற்றும் 06 அகலத்துக்கு அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சீகிரிய தொல்பொருள் அலுவலகத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்புள்ளை மற்றும் சீகிரியா பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேவையற்ற அகழ்வு சம்பந்தமாக வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியிருந்தமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + six =

*