அலி ரொஷானை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு..!!

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேரையும் எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
விகும் களுராச்சி, தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெதி ஆகிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டது.