கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை..!!(படங்கள்)

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று மாலை பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பயணிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்கள ஊழியர்களினால் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று மாலை பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.எனினும் பணி பகிஷ்கரிப்பு நிறைவடைந்த போதிலும் எந்தவொரு ரயிலும் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பணத்தை ஆரம்பிக்காமல் இருந்துள்ளது.பகிஷ்கரிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டவுடன் பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
எனினும் ரயில்கள் சேவையில் ஈடுபடாமையினால் கோபமடைந்த பயணிகள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதனால் ரயில் நிலையத்தில் சற்று பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.