;
Athirady Tamil News

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது..!!

0

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கடான பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று பகல் நீர்கொழும்பு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த் 53 வயதுடைய ஜயவீர ஆரச்சிகே ​ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + thirteen =

*