;
Athirady Tamil News

சிறு பணபயிர் செய்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் அங்கஜன் எம்பி..!!(படங்கள்)

0

பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலக பரப்பில் ஜனாதிபதி அவர்களினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் 33 வெங்காய செய்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் வெங்காய கொட்டில்களுக்கான மானிய காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

வெங்காய கொட்டகைக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆழ்வார் பிள்ளை ஸ்ரீ அவர்கள் தலைமையில் பருத்தித்துறை செயலக மண்டபத்தில் (7) இன்று காலை இடம்பெற்றிருந்தது.

உணவு உற்பத்தி செயற்திட்டதின் மூலம் 157 பேருக்கு இதுவரை வெங்காய கொட்டில்களுக்கான மானிய காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் வடக்கின் துரித விவசாய மீள் எழுச்சி திட்டத்தின் ஊடாகவும் விவசாய பிரதி அமைச்சராக இருந்த போதும் வெங்காய செய்கையாளர்களுக்கு முதன் முறையாக வெங்காய கொட்டில்களை வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சிறு பணப்பயிராக சிறந்த வருவாயை விவசாய பெருமக்களுக்கு வழங்குவதோடு, இம் முறையும் அறுவடையின் மூலம் சந்தை வாய்ப்பை பெற்றிருந்ததாகவும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்.

அறுவடை காலங்களின் போது இறக்குமதி வரி குறித்து விவசாயிகளின் நலன் கருதி கவனம் செலுத்தப்படும் எனவும் குறைந்த கால செய்கையின் மூலம் வெங்காயம்,உருளைகிழங்கு அறுவடை கிடைப்பதோடு,அதற்கான விதை ,விற்பனை , மானியம், களஞ்சியப்படுத்தல் ஆகியன கவனம் செலுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள். தற்போதும் விவசாயிகளுடனான எனது பயணம் தொடர்வதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜெயகுமார், மற்றும் செயலக உத்தியோகத்தர்களுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பாலரமேஸ், பருத்தித்துறை தொகுதி இணைப்பாளர் செல்வதீசன், உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளர் இனியவன்,ஆகியோர் இணைந்திருந்து நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*