;
Athirady Tamil News

தென்னிலங்கையில் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை..!!

0

ஹம்பாந்தோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹம்பாந்தோட்டையை சேர்ந்த 46 வயதான பெருமாள் காளிதாஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டவர் மீனவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹம்பாந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + three =

*