;
Athirady Tamil News

அவர்களை பொறுத்த வரையில் எல்லாவற்றிற்கும் ராஜபக்ஷ மாத்திரமே..!!

0

அந்த கட்சியை பொறுத்த வரையில் எல்லாவற்றிற்கும் ராஜபக்ஷ மாத்திரமே இருப்பதாக கூறுவார்கள். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் விக்ரமசிங்க, கமகே, ரணவக, ஜயசூரிய, பிரேதமதாஸ என பலர் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (08) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்திய குடும்ப ஆட்சி ஐக்கிய தேசிய கட்சியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் மதூஷுடன் தொடர்புடைய கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன வெளியிட்ட கருத்து தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், தன்னுடன் தொடர்புடைய ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 4 பேரும் மொட்டு கட்சியை சேர்ந்த 3 பேரும் இருப்பதாக மதூஷ் தெரிவித்திருந்ததாகவும் அதனால் இந்த விடயம் தொடர்பில் உண்மை தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்பட வேண்டும் எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*