;
Athirady Tamil News

ஒரு மாத காலத்தை காங்கிரசார் வீணடித்து விட்டனர்- கரன் சிங் கடும் தாக்கு..!!

0

பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதில் புதிய தலைவர் இன்னமும் தேர்ந்து எடுக்கப்படவில்லை. புதிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பதில் கடும் குழப்பம் நிலவுகிறது.

காங்கிரசில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று ராகுல் பல தடவை கூறி விட்டார். அதன்பிறகும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரிடம் போய் கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். இப்படி கெஞ்சி, கெஞ்சியே 1 மாதத்தை காங்கிரசார் வீணடித்து விட்டனர்.

ராகுல் காந்தி

ராகுல் நேர்மையானவர். அவர் தன்னால் முடிந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து விட்டார். இனியும் காங்கிரசார் அவருக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கக் கூடாது.

எனவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த வாரமே காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன்சிங் தலைமை தாங்க வேண்டும்.

அந்த கூட்டத்தில் ஒரு இடைக்கால தலைவர் மற்றும் 4 செயல் தலைவர்கள் என 5 பேர் குழுவை தேர்வு செய்யலாம். நான்கு செயல் தலைவர்களுக்கு பதில் நான்கு பேரை துணை தலைவர்களாக கூட நியமிக்கலாம்.

அந்த 4 பேரையும் நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து தேர்ந்து எடுக்கலாம். இதன் மூலம் காங்கிரஸ் நிர்வாக பணிகளுக்கு இளைஞர்களை அறிமுகம் செய்யலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமானால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ராகுலின் விருப்பமும் இதுதான். எனவே ராகுலின் ராஜினாமாவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும்.

காங்கிரசில் இப்போது நிலவும் குழப்ப நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. மிக விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும். புதிய தலைவரை ஓரிரு நாட்களில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு கரன்சிங் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த வாரமே காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது. அதில் புதிய தலைவர் தேர்வாக உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*