;
Athirady Tamil News

வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏழு பதக்கங்கள்..!!(படங்கள்)

0

யாழ்ப்பாணம் துரையப்பா விழையாட்டரங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட மாணவர்கள் ஏழு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான கெ.நிசோபன் 1500 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், 5000 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும், கெ.நிசாந்தன் 1500 மீற்றரில் வெள்ளி பதக்கத்தையும் சுவீகரித்திருந்தனர்.

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவியான எஸ்.கேமபிரியா 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றரில் தங்கப்பதக்கத்தையும், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும், சிறிராமாபுரம் திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவியான ஜெ.தனுசியா 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், பயிற்சியாளருக்கும் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 5 =

*