;
Athirady Tamil News

தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிப்பு..!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சரத் அமுனுகம தலைமையில் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான கலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை முதற்தடவையாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் தனிப்பட்ட விஜயமாக இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளார்.

தனது மகனின் பட்டமளிப்பு நிகழ்வுக்காவே அவர் அங்கு சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + seven =

*