;
Athirady Tamil News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ராஜபக்சவினர் மட்டுமே இருக்கின்றனர்: ரஞ்சன் ராமநாயக்க..!!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ராஜபக்சவினர் மாத்திரமே இருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் விக்ரமசிங்கவினர், கமகேவினர், ஜயசூரியவினர், ரணவக்கவினர், பிரேமதாசவினர் என பலர் இருக்கின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.இதன் பின்னர் வெளியில் கூடியிருந்த செய்தியாளர்களில் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருப்பது தாமதம் தானே, ராஜாங்க அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சர்வாதிகாரமும் குடும்ப அரசியலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை எனவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை மாகந்துரே மதுஷூடன், போதைப்பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நான்கு பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த மூன்று பேரும் இருப்பதாகவும் இது தொடர்பான உண்மை எதிர்காலத்தில் கட்டாயம் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*