;
Athirady Tamil News

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம் – வியத்மக அமைப்பு அறிவிப்பு..!!

0

கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் உருவான வியத்மக அமைப்பின் புத்திஜீவிகள் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரித்து நிறைவு செய்திருக்கிறோம் எனத் தெரிவித்த கலாநிதி நாலக கொடஹேவா அதனை எதிர்வரும் தேர்தலில் எமது திட்டத்தை மக்கள் முன் சமர்ப்பிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் 20 மில்லியன் மனிதவளத்தை முறையாக நிர்வகிப்பதே நாங்கள் முக்கியத்துவம் வழங்கும் முதன்மை விடயமாகும். இலஞ்சம், ஊழலை இல்லாதொழிப்போம் என்றுகூறி நாங்கள் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டோம். இலங்கையர்களை மீண்டும் உலகத்தின் அபிமானத்திற்குரிய பிரஜைகளாக மாற்றுவதே எமது தேவையாகும் என்றார்.

கேகாலையில் நடைபெற்ற வியத்மக அமைப்பின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. அப்போது 62 இலட்சம் மக்கள் சிறப்பானதொரு நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என்று நம்பினார்கள். எனினும் நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது பார்க்கும்போது 2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை எவரும் விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது. மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய எந்தவொரு மாற்றமும் இந்த ஆட்சியில் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − eleven =

*