;
Athirady Tamil News

சாதாரண தரப்பரீட்சையில் தேர்ச்சி பெறாத 80 பேர் நாடாளுமன்றத்தில் – சரத் பொன்சேகா..!!

0

சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மற்றும் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்வது நாட்டு மக்கள் செய்யும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத 70 முதல் 80 வரையான நபர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறக் கூடிய நபரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தக் கூடாது. நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒருவரை நிறுத்த வேண்டும்.நாட்டை கட்டியெழுப்பக் கூடிய தலைவரை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தினால், அவருக்கு ஆதரவளிக்கப்படும்.

அப்படியான தலைவரை நிறுத்தவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*