;
Athirady Tamil News

பொகவந்தலாவ நகர வீதியினை திறந்து வைத்தார் நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தை வேல்..!!(படங்கள்)

0

பொகவந்தலாவ நகரவீதி காப்பட் ஈடும் பணி நிறைவடைந்த தருவாயில் 09.07.2019.
செவ்வாய்கிழமை திறந்து வைக்கபட்டது.

இந்த வீதயினை நோர்வுட் பிரதேசசபையின்
தவிசாளர் ரவிகுழுந்தைவேலினால் திறந்து வைக்கபட்டது இதன் போது இலங்கை
தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேலை பொகவந்தலாவ நகர வீதியினை காப்பட் ஈடும் பணியினை ஆரம்பித்து
வைக்கும் முகமாக கடந்த வாரம் இலங்கை தொழிலாளர் காங்ரசின் நோர்வுட்
பிரதேசசபையின் உதவி தவிசாளர் தட்சானமுர்த்தி கிஷோகுமார் உட்பட பிரதேசசபை
உறுப்பினர் ஆரம்பித்து வைத்தனர்.

அதன் பிறகு தொழிலாளர் தேசிய சங்கத்தின்
சார்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்
உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேசசபை உறுப்பினர்களான பா.சிவநேசன்
பழனிவேல் கல்யானகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்
பலரும் இனைத்து ஆரம்பகட்ட பணியினை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது எதிர் வரும் 14ம் திகதி பொகவந்தலாவ நகர வீதியினை தொழிலாளர்
தேசிய சங்கத்தின் அழைப்பின் பேரில் வீதிகள் மற்றும் பெருந்தெருக்கல்
அமைச்சர் கபிர்ஹாசிம் அவர்களினால் திறந்த வைப்பதற்கு நாள்
குறிக்கபட்டிருந்த போதிலும் 09.07.2019. செவ்வாய்கிழமை மாலை நோர்வுட்
பிரதேசசபையின் தலைவரால் திறந்து வைக்கபட்டது

குறித்த வீதியினை திறந்துவைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நோர்வுட்
பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேல் 2015ம் ஆண்டு நாட்டில் ஒரு
ஆட்சிமாற்றம் வந்தது பொழுது சுமார் ழூன்று வருடங்கள் குறித்த வீதியினை
எவரும் புனமைப்பு பணிகளை மேற்கொள்ள முன்வரவில்லை.

நோர்வுட் பிரதேசசபையினை
நாங்கள் கைபற்றிய பிறகு மக்களிடம் அறிவித்து இருந்தோம் பொகவந்தலாவ
நகரத்தை தாம் அபிவிருத்தி செய்யபோவதாக வாக்குருதி வழங்கியிருந்தேன் அதன்
அடிப்படையில் வடிகான் புனரமைப்புக்காக 25இலச்சம் செலவு செய்யபட்டுள்ளதோடு
பிரதேசசபையின் ஊடாக ஜந்து இலச்சம் ருவாவினை வழங்கி இந்த வீதியினை காப்பட்
ஈடுவதற்கு பணிகளை ஆரம்பித்தோம்.

அதன் பிறகு அரசியல் மாற்றம் போன்ற
பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடாக
சம்பந்த பட்ட அதிகாரிகளோடு கலந்தரையாடி 18மில்லியன் ருபா செலவில் இந்த
பொகவந்தலாவ நகர வீதி காப்பட் ஈடபட்டதாக தெரிவித்தார்

இதேவேலை கடந்த வாரம் குறித்த வீதியின் ஆரம்பகட்ட பணிகளை தொழிலாளர் தேசிய
சங்கத்தின் ஊடாக ஆரம்பகட்ட நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கபட்டமையும்
குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 8 =

*