;
Athirady Tamil News

நல்லாட்சி தற்போதைய காலத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை..!!

0

நல்லாட்சி தற்போதைய காலத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் விஹாரைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்தது தற்போதைய அரசாங்கமே என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட விஹாரைகளுக்காக மாத்திரம் இந்த வருடத்தில் சுமார் 100 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீடுகளை புனரமைப்பதற்காக மூன்று லட்சம் ரூபா நிதி வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு வினைத்திறனுடனும் செயலூக்கத்துடனும் செயற்படுவதாக பிரதி அமைச்சர் அஜித் மான்னபெரும மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − ten =

*