;
Athirady Tamil News

கழிவுத் தேயிலைத் தூள்களுடன் ஒருவர் கைது..!!

0

சுமார் 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான கழிவுத் தேயிலைத் தூள்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் பேராதனை, பாதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷேட அதிரடிப் படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால் லொறி ஒன்று நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 4810 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூள்களை விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − five =

*