;
Athirady Tamil News

மஹிந்தவை பதவி விலக வேண்டாம் என ரணில் கோரிக்கை..!!

0

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளார்.தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக மஹிந்த தேசப்பிரிய அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பதவியை ராஜினாமா செய்வது பொருத்தமாக அமையாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு இடையூறாக அமையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

பதவியை துறக்காது தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 6 =

*