;
Athirady Tamil News

150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்களுடன் நான்கு பேர் கைது..!!

0

அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று இரத்தினபுரி, திரிவானகெடிய வீதித் தடையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சந்தேகத்திற்கிடமான 150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்துள்ளதுடன், இரசாயணப் பொருட்கள் அடங்கிய 05 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் இராணுவ சேவையில் பணியாற்றக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான குறித்த இரசாயணப் பொருட்கள் நீதிமன்ற கட்டளையின் பின்னர் இசைாயணப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*