;
Athirady Tamil News

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்..!!

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜில்ஸ் டி கெர்ஷோவ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் , எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாதுகாப்பு பிரிவு மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

டி கெர்ஷோவ் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், அனுபவங்களை சிறந்த முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய வழிமுறைகளை வடிவமைப்பது பற்றியும் இவர் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fifteen =

*