குற்றச்சாட்டை மறுக்கும் தயாசிறி ஜயசேகர..!!

ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிந்திருந்தனர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் குண்டு தாக்குதல் நடக்க போவதாக அறிந்திருந்தனர் எனக் கூறுகின்றனர். உண்மையில் நாங்கள் அது பற்றி அறிந்திருக்கவில்லை.
இது முற்றிலும் பொய்யானது.கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடக்காது தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது. மக்களுக்கும் இது பிரச்சினை.ஈஸ்டர் தினம் இலங்கையின் இரண்டு ஹோட்டல்களில் குண்டு தாக்குதல்கள் நடந்தன.
மற்றைய ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை என்ற காரணத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழு கண்டறிய வேண்டும். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்காது குறித்து சரியாக தேடிப்பார்க்கவில்லை.இந்த ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்படாமை ஏதேனும் காரணம் இருக்கலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.