;
Athirady Tamil News

அறுவடை கிடைத்தது கா.பொ.த உயர்தர கற்கை..!! (படங்கள்)

0

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தழிழ் கலவன் பாடசாலையில்இ உயர்வ்வாதர வகுப்பை ஆரம்புக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்றைதினம் உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த .உயர்தரம் புதிதாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 10:30 மணிக்கு பாடசாலை அதிபர் த.யோகலிங்கம் தலமையில் இடம் பெற்றது.

இதில் மங்கள விளக்குகளை கட்டைக்காடு பங்குத் தந்தை மைக் றொனால்ட் பங்குத் தந்தை ரமேஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் கோட்டக் கல்வி அதிகாரி ச.திரவியராசா பருத்தித்துறை பிரதேச சபை வட்டார உறுப்பினர் செ. செபஸ்ரியன் சி.பிரசாத் பாடசாலை அதிபர் த.யோகலிங்கம் மற்றும் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் ஏற்றினர்.

இதனைத்தொடர்ந்து ஆசி உரையினை கட்டைக்காடு பங்குத்தந்தை மைக் றொனால்ட் நிகழ்த்தினார்.தொடர்ந்து கருத்துரைகளை வணபிதா ரமேஸ் மருதங்கேணி கோட்ட கல்வி அதிகாரி திரவியராசா வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் முனனாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான சி.பிரசாத் செ.செபஸ்ரியன் உட்பட பலரும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் புதிய உயர்தர மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என நூற்றிற்க்கு மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.கட்டைக்காடு கிராம மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு இன்று இவ் உயர்தர வகுப்பை தமது பாடசாலையில் ஆம்பித்தது அவர்களது போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + five =

*