;
Athirady Tamil News

தாயாரின் அதிரடி நடவடிக்கையால் குடும்பத்தில் நான்கு மாணவர்கள் பாடசாலையில் இருந்து விடுவிப்பு…!! (படங்கள்)

0

தாயாரின் அதிரடி நடவடிக்கையால் ஒரே குடும்பத்தில்
நான்கு மாணவர்கள் பாடசாலையில் இருந்து விடுவிப்பு
ஊரெழு கணேசாவில் சம்பவம்.

அதிபர் , ஆசிரியர் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரி ஆகியோரின் ஆலோசனை வழிகாட்டுதல் ஆகியவற்றினையும் மீறியே ஒரு தாயார் தனது விருப்பின் அடிப்படையில் நான்கு பிள்ளைகளையும் பாடசாலையில் இருந்து நீக்கம் செய்துள்ளார். இப்போ இடைத்தவணைப் பரீட்சைக் காலம் எந்த ஒரு நியாயமான காரணமும் இன்றி பிள்ளையை எந்த பாடசாலைகளும் ஏற்றுக் கொள்ள முடியாது. நான்கு பிள்ளைகளும் கெட்டித்தனமானவர்கள் பாடசாலைக்கு 99 வீதம் அவர்கள் வருவதில்லை , பெற்றோரும் பிள்ளைகளில் எந்த அக்கறையும் இல்லை. பெற்றோரின் அறியாமையினால் 4 மாணவர்களின் கல்வி சிதைக்கப் பட்டுள்ளது என ஆதங்கம் வெளியிட்டுள்ளார் .யாழ் .ஊரெழு கணேஷா வித்தியாசாலை அதிபர் அன்ரன் பிரேமதாஸ் .

கடந்த ஜூன் மாதம் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்களின் தாயார் தனது பிள்ளைகளை இப்பாடசாலையில் இருந்து நீக்கம் செய்து தரும்படி அடம்பிடித்தது , முரண்பட்டு விடுகைப் பாத்திரம் பெற்றுக் கொண்டதுடன் பல்வேறு பாடசாலைக்கு அனுமதி கேட்டு , அலைந்து திரிந்துள்ளார். அலைந்து திரிந்த நிலையில் வேறு பாடசாலை அதிபர்களும் குறித்த மாணவர்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர்

.இது தொடர்பில் மாணவர்கள் கல்வி பயின்ற .யாழ் .ஊரெழு கணேஷா வித்தியாசாலை அதிபர் அன்ரன் பிரேமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து மூன்று மணி நேரமாக நிலைமைகளை கேட்டறிந் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் ,

8 ஆம் தரம், 5 ஆம் தரம் 3 ஆம் தரம் ,2 ஆம் தரம் ஆகிய பிரிவுகளில் நான்கு மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அவர்களின் வருகை வீதம் 90 வீ தத்திலும் குறைவு. ஆனால் கல்வியில் ஆர்வம் உள்ள கெட்டித்தனமான மாணவர்கள், ஆசிரியரின் விருப்புக்கு உரிய மாணவர்கள் . அவர்கள் சப்பாத்து , புத்தகப் பை , கழுத்துப் பட்டி , காலுறை , எழுத்துக்கு கொப்பி இப்படி அடிக்கடி ஒன்றும் இல்லாமல் வருவார்கள். பிள்ளைகள் மற்றும் , பெற்றோரின் நிலைமை தெரிந்து நாம் பல மன்னிப்புக்களை கொடுத்து பிள்ளளைக்கு தேவையான வளங்களை பல்வேறு வழிகளில் பெற்றுக் கொடுத்தான் வருகின்றோம் .

ஆனால் பிள்ளைகளின் பாடசாலை வரவு இன்மை தொடர்பில் பலதடவை பெற்றோரை அழைத்தோம். அவர்கள் ஒருபோதும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு பாடசாலை வருவதில்லை. . பிள்ளையின் பிறப்பு சான்றிதழ் கூட நானும் இன்னொருஆசிரியரும் வீடுதேடிச் சென்று வீட்டில் இருந்து வாங்கி வந்துள்ளோம்.

இந்நிலையில் தான் பிள்ளைமீது பெற்றோரின் அக்கறை உள்ளது. . அதே போன்று தான் அண்மையில் பிள்ளைகளின் வரவு ஒழுங்கீனம் காரணமாக பெற்றோரை அழைத்தோம் . உடனே அந்த தாயார் எந்த புரிதலும் இன்றி , ஆசிரியர் , திணைக்கள அதிகாரிகள் உட்பட எவரினத்தும் ஆலோசனையையும் புரிந்து கொள்ளாமல் ” பிள்ளை படித்து தான் என்ன பயன் ?. ”எனக் கேட்டு மிகப் பிடிவாதமாக நின்று திணைக்கள அதிகாரி ஒருவர் முன்னிலையில் பிள்ளைகளை நீக்கம் செய்து சான்றிதழை பெற்றுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு மாணவன் இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பாரிசில் பரீட்சை எழுத உள்ளான் ., அவன் எப்படியும் எனது பாடசாலையில் தான் தோற்ற முடியும் . நான் மறுக்க மாட் டேன் . ஆனால் இதன் பின் பிள்ளைகளின் படிப்பு தான் சீர் குலைய போகிறது.. தாயார் வேலைக்கு செல்வதும் தந்தை வேலையின்றி வீட்டில் இருப்பதுமான நிலையிலும் பிள்ளைகளை ஒழுங்கு முறையாக பாடசாலைக்கு அனுப்புவதில் விருப்பு அற்று உள்ளனர்.

சிறுவயதில் பிள்ளைகளை உழைப்பாளிகள் ஆக்கி கை நிறைய உழைச்சு மோட்டார் சைக்கிளோட திரிஞ்சால் போதும் என்று நினைக்கின்றனர். இந்த தாயின் இத்தகைய செயல் ஏனைய கல்வி சமூகத்தையும் பாதிக்க செய்துள்ளது/. எதிர் கால சமூகத்தை பாதிக்க செய்துள்ளது. கிராம சேவையாளர், மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கு இவர்களின் நிலை தெரியும் .

அதே நேரம் இடைத்த தவணையில் எந்த மாணவரையும் காரணமின்றி இன்னொரு பாடசாலை அனுப்ப முடியாது ./ இந்நிலை புரியாமல் நான் ;;”’ தான் வேறு பாடசாலையிலும் அனுமதிக்க வேண்டாம் ” என்று கூறுகின்றேன் என குறித்த தாய் குற்றம் சாட்டி வருகின்றார். இது மாணவர்களின் கல்வி உரிமை. அதை கொடுப்பது பெற்றோர் கடமை .பெற்றோருக்கு பிள்ளைகளில் அக்கறை இருக்க விவ்ல்லை அதுவே இன்று மாணவர்களின் கல்வியில் பாதிப்பை கொடுத்துள்ளது .

எத்தனை பாடசாலை சென்றாலும் சாரி என்னிடம் மீண்டும் வந்து மாணவர்களுக்காக எந்த நிர்வாகமும் அனுமதி கோரா முடியாது . நான் மாணவர்களுக்காக பல விதங்களிலும் கஷ்டப் பட்டுள்ளேன். அவர்களின் தேவையை , நலனை கருத்தில் கொண்டு செயற்பட்டுள்ளேன், பிள்ளையின் எதிர் காலம் கருதி பிள்ளையை ஒழுங்கு தவறாமல் பாடசாலை அனுப்பும் படி ஒரு தாய்க்கு அதிபர் சொல்வது தவறா ?

நான் பிள்ளைகளை வெளியேற்றவில்லை. மாணவர்களின் தாயார் தான் வெளியேற்றும் படி கட்டாயப் படுத்தினார். எனக் கூறியவரிடம் மீண்டும் ஒரு வினாவைத் தொடுத்தோம் , ,

தாயாரை புரிய வைத்து, பிள்ளைகளின் கல்விக்காக பிள்ளைகளுக்கு மன்னிப்பு கொடுத்து அவர்களை மீண்டும் உள்வாங்க முடியாதா ?

என வினவிய போது , தாயாரின் விளக்கமின்றிய மனநிலையினால் பாதிக்கப் பட்டுள்ளது பிள்ளைகள் . அவர்களுக்கு தாயின் வார்த்தை மட்டும் தான் தெரியும் . அவர்களை தேடி வீடு சென்றால் பின்னுக்குள்ள காணி பற்றைகளால் ஓடுவார்கள், படிக்கவோ, பாடசாலை வரவோ விருப்பம் இல்லை.. இப்போ பலர் வந்து மன்னித்து பிள்ளையை இணைத்து விட்டு செல்வீர்கள் , போனால் போனது தான் . அவன் திரும்ப வீட்டில் அல்லது தெருவில் தான் நிப்பான்., தெருவில் நின்று விளையாடுவதில் விருப்புடையவர்கள் .

பொறுப்பு ஏற்றவர்கள் தீரும்ப திரும்ப பிள்ளைகளை கண்காணிப்பதில்லை. இந்த சந்தர்ப்பங்களில் மனித உரிமை நிறுவனங்களும் தவறு செய்து விடுகின்றனர். எல்லோரும் எம்மை குற்றவாளியாக நிறுத்த முன் நிற்றப்பார்களே தவிர பிரச்சனையை தீர ஆராய்வதில்லை. .

மீண்டும் சொல்கின்றேன் குறித்த தாயார் தன்னால் எத்தனை பாடசாலையிலும் பிள்ளையை அனுமதிக்க முடியும் , எனக்கு எல்லாம் தெரியும் என்று பாடசாலை கட்டமைப்பின் ஒழுங்கை மீறி , மாணவர்களை வெளிக்கொண்டு சென்றுள்ளார். ஆகவே அவரால் முடிந்தால் எந்தப்பாடசாலையிலும் இணைத்துக் கொள்ளட்டும் . நான்கு மாணவர்கள் மட்டுமல்ல பாடசாலையில் கல்வி பயிலும் எந்த பிள்ளையிலும் அதிபர் என்ற வகையில் பாடசாலை வருகை தரும் படி அழைப்பது தவறா?. தவறு என்றால் யார் வந்தாலும் பதிலளிக்க நான் தயாராக உள்ளேன் . என்றார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 13 =

*