;
Athirady Tamil News

சட்டவிரோத காடழிப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மக்கள் கோரிக்கை..!!

0

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப்புக்களை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அண்மைய நாட்களாக சட்டவிரோதமான முறையில் காடழிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிகவும் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை, யாவறனை, தேக்கு போன்ற மரங்கள் அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெட்டப்பட்டு, வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.குறிப்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சிறாட்டிகுளம், மூப்பன் குளம், பறங்கியாறு, எருவில் ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் அதிவிலை உயர்ந்த பாலை, முதிரை போன்ற மரங்கள் பகல் வேளைகளில் வெட்டப்பட்டு கனரக வாகனங்களில் சிறாட்டிகுளம், நட்டாங்கண்டல் வீதியூடாக கொண்டு செல்லப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய பல அரச திணைக்களங்கள் அதிகாரிகளின் அலுவலகங்களை கடந்தும் மரங்கள் வெளியிடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றன.குறித்த பிரதேசத்தில் வசிக்கும் ஏழை மக்கள் தற்காலிக வீட்டுத்திட்டங்களுக்கு தேவையான மரங்களை தமது பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மரங்களையே அதிக விலைக்கு கொள்வனவு செய்யகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 6 =

*