அரசாங்கத்தை ஆதரிக்கும் தார்மீக உரிமை ஜே.வி.பிக்கு இல்லை..!!

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ள மக்கள் விடுதலை முன்னணிக்கு இதன் பின்னர் அரசாங்கத்தின் எந்த செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார்.2015ஆம் ஆண்டில் செய்தது போது, எதிர்காலத்தில் அரசாங்கம் நிறுத்தும் வேட்பாளருக்கு மறைமுகமாக கூட மக்கள் விடுதலை முன்னணியினால் ஆதரவு வழங்க முடியாது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசாங்கத்தை பாதுகாக்க உதவிய அனைத்து தரப்பினரையும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தமை, பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியாகும் எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம,அரசாங்கம் அசௌகரியங்களை எதிர்நோக்கி அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு உதவியது. மகிந்த ராஜபக்சவின் 52 நாள் அரசாங்கத்தின் காலத்தில், மக்கள் விடுதலை முன்னணி நடந்து கொண்ட விதம் இதற்கு சிறந்த உதாரணம் என கூறியுள்ளார்.