;
Athirady Tamil News

வைக்கோல் தீயிட்டுக் கொழுத்தப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் விசனம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி – அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்காணிகளில் உள்ள வைக்கோல் தீயிட்டுக் கொழுத்தப்பட்டு வருவது தொடர்பில் பண்ணையாளர்களும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கை அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டு 90 வீதமான அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.இந்நிலையில் நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்காணிகளில் உள்ள வைக்கோல் தொடர்ச்சியாக தீயிட்டுக் கொழுத்தப்பட்டு வருகின்றன.

பயிர்ச்செய்கை காலங்களில் கால்நடைகளுக்கான மேச்சலின்மை மற்றும் வறட்சி நிலை காரணமாக கால்நடைகள் உணவின்றி காணப்பட்டன.சிறுபோக அறுவடை நிறைவுபெற்று வரும் நிலையில் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை அறுவடை செய்த வயல் நிலைங்களில் தற்போது வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அறுவடை செய்த வயல் நிலங்களில் உள்ள வைக்கோலை தீயிட்டு கொழுத்தப்பட்டு வருவதால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அறுவடை செய்த வயல் நிலங்களில் காணப்படும் வைக்கோல் மற்றும் வயல் நிலங்களில் தீ வைத்து கொழுத்துவது சட்டரீதியற்றது என்றும் இவ்வாறு வைக்கோல்கள் தீயிட்டு கொழுத்தும் விவசாயிகளுக்கான மானியங்கள் நிறுத்தப்படும் என்றும் இவ்வாறான விவசாயிகளின் விபரங்களை சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புக்கள் கமநலசேவை நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கமநலசேவை நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*