;
Athirady Tamil News

பிரதமர் உள்ளிட்ட பலர் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு வரவழைப்பு?…!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க அரச புலனாய்வு பிரிவின் பிரதானி உள்ளிட்ட பல அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு, மீண்டும் எதிர்வரும் 24 ஆம் கூடவுள்ளது.

அதன்போது, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன, குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவீரத்ன, புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரன ஆகியோர் வரவழைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு சாட்சி வழங்கத் தயாராகி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + five =

*