;
Athirady Tamil News

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா வழங்குவதாக கூறிய அரசாங்கம் என்னும் வழங்கவில்லை…!! (படங்கள்)

0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா வழங்குவதாக கூறிய அரசாங்கம் இதுவரையிலும் 50சதத்தை கூட ;வழங்கவில்லை என அகில இங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் குற்றச்சாட்டு

மலையக பெருந்தொட்ட தொழிலாளர்களுக்கு 50ருபாவினை வழங்குவதாக கூறிய அரசாங்கம் இதுவரையிலும் 50சதத்தை கூட ;வழங்கவில்லை என அகில இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் குற்றம் சுமத்தியுள்ளார் 12.07.2019. வெள்ளிகிழமை அட்டன் மணி கூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுக்கபட்ட கையெழுத்தை வேட்டடையின் போதே அவர் இதனை தெரிவித்தார்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த கிட்னன் செல்வராஜ் 2019ம் ஆண்டிற்கான பதிட்டின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா மானிய முறையில் நாள் ஒன்றுக்கு பெற்று தருவதாக இந்த அரசாங்கம் கூறியிருந்தது பிரதமர் ரனில் விக்ரசிங்க அவர்களுடைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூறியிருந்தார்கள் 2019ம் ஆண்டு பாதிட்டின் ஊடாக ஜனவரி மாதம் பெற்று தருவதாக வாக்குருதி வழங்கினார்கள் பிறகு கூறினார்கள் ஏப்ரல் மாதம் தருவதாக தற்பொழுது ஜீலைமாதம் தருவதாக கூறிய 50ருபா கொடுப்பணவு தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் வழங்கபட வில்லை

நாம் அனைவருக்கும் தெரியும் இந்த நாட்டில் தோட்ட தொழிலாளர்கள் ஒரு இலச்சத்து நாற்பது ஆயிரம் பேர் இருப்பதாக அரசாங்கம் கூறியவாரு தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த 50ருபா வழங்கபடாவிட்டால் இந்த ஜீலைமாதம் வரை தோட்ட தொழிலாளி ஒருவருக்கு 7200ருபா வழங்கபட வேண்டும் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டி கோடிகனக்கான பணத்தை இந்த அரசாங்கமும் அமைச்சர்களும் வழங்காமல் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறார்கள்

எனவே தோட்ட தொழிலாளர்களின் கோறிக்கையினை நிறைவேற்றதா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தோட்ட தொழிலாளர்கள் முன்வர வேண்டும் அதற்கு முதற் கட்டமாகத்தான் பாராளுமன்றத்தில் கொண்டுவர பட்டது நம்பிக்கை இல்லா பிரேரனை கொண்டு வரபட்ட நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த 50ருபாவினை வழங்க முடியாத அரசாங்கத்திற்கு மலையகத்தில் உள்ள அமைச்சர்கள் துனைபோய்விட்டார்கள்

தோட்ட தொழிலளர்களுக்கு இருக்கின்ற பிரதான பொருப்புதான் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது தோட்ட தொழிலாளர்களின் கிடைக்க வேண்டி உரிமைகளையும் சலுகைகளை பெற்று கொடுக்க புதிய ஒரு அமைப்பை கட்டடி எழுப்பவேண்டி தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + five =

*