;
Athirady Tamil News

மின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..!!

0

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடு எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

வாடிக்கையாளர் கட்டண அறவீட்டு முறைமையை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பது சிறந்ததாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − six =

*