;
Athirady Tamil News

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!!

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 03 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 62, 48,39,27,22 மற்றும் 12 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் வைத்திய பரிசோதனையின் பின்னர் யாழ். கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*