;
Athirady Tamil News

காணி விசேட ஏற்பாடு சட்டமூலம் சம்பந்தமான தீர்ப்பு சபாநாயகருக்கு..!!

0

அரசாங்கத்தால் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள அரச காணிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விசாரணையை நிறைவு செய்துள்ள உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச காணிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருப்பதால், அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பில் எழுத்து மூல விளக்கமளிக்க இருப்பின் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக சமர்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புவனேக அலுவிஹாரே, பிரசன்ன ஜெயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயக்கொடி மற்றும் உதய கம்மன்பில மற்றும் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த மற்றும் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + five =

*